தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்த ரியாஸ்கானின் மகன் ஷாரிக் மரியா என்ற பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். மரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.
அவருக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஜோடியின் நேர்காணல் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் இவர்கள் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது தங்களது காதலை குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
அப்போது பேசிய மரியா ஷார்க்கிற்கு என்னை பார்த்த உடனே காதல் வந்துவிட்டது. ஆனால், அவர் காதலை சொல்லவே இல்லை. என்ன பார்த்து ஒரு வாரத்திலேயே என்னிடம் வந்து திருமணம் செய்து கொள்ள நினைப்பதாகத்தான் அவர் கூறினார். எனவே காதலை சொல்வதற்கு முன்னர் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் என்னை அப்ரோச் செய்தார் ப்ரபோஸ் செய்தார் என மரியா கூறியிருக்கிறார்.