நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்…. 8 வயசுல மகள் வச்சிட்டு தல தீபாவளி கொண்டாடிய பிரபலம்!

Author:
1 November 2024, 5:01 pm

நடிகர் ரியாஸ் கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன் பெரும்பாலான தமிழ் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலம் ஆனார். இவர் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

shariq

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பலமொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் சுறா, ஆதவன், திருப்பதி, கஜினி , வின்னர், பாபா உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார் . இதனிடையே பழம்பெரும் நடிகையான கமலா காமேஷின் மகளான உமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு “ஷாரிக்” என்கிற ஒரு மகன் இருக்கிறார். கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி போட்டியாளராக ஷாரிக் பங்கேற்றார். கிட்டத்தட்ட 49 நாட்கள் அந்த வீட்டில் இருந்த ஷாரிக்அதன் பின்னர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வந்த மகன் ஷாரிக்கிற்கு அண்மையில் நீண்ட நாள் காதலி மரியா என்பருடன் திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த நட்சத்திர பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அண்மையில் தான் இவர்களது திருமண ரகசியங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வந்தது.

அதாவது ஷாரிக் திருமணம் செய்து கொண்டிருக்கும் மரியா 45 வயது பெண் என்றும் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்ற செய்தியும் தற்போது சமீபத்தில் தான் தெரிய வந்தது.

shariq

ஷாரிக் தனது மனைவி மகள் மற்றும் தாய் தந்தை அனைவருடனும் தல தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் நல்ல வளர்ப்பு ஷாரிக்கின் தாய் தந்தை மிகச் சிறந்தவர்கள் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என அவரது செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 135

    0

    0