என்ன இதோட நிறுத்திட்ட…? பர்ஸ்ட் நைட் படம் பிடிச்சி காட்டு- கட்டத்துரை மகனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

Author:
7 August 2024, 10:45 am

கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன் பெரும்பாலான தமிழ் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் நடிகர் ரியாஸ். பிரசாந்தின் வின்னர் திரைப்படத்தில் கட்டத்துரைதேவர் என்ற ரோலில் நடித்த இவர் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பலமொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் சுறா, ஆதவன், திருப்பதி, கஜினி , வின்னர், பாபா உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார் . இதனிடையே பழம்பெரும் நடிகையான கமலா காமேஷின் மகளான உமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு “ஷாரிக்” என்கிற ஒரு மகன் இருக்கிறார். கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி போட்டியாளராக ஷாரிக் பங்கேற்றார். கிட்டத்தட்ட 49 நாட்கள் அந்த வீட்டில் இருந்த ஷாரிக்அதன் பின்னர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வந்த மகன் ஷாரிக்கிற்கு தற்போது 29 வயது ஆகிறது.

வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி இவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து Haldi function நடத்தியுள்ளனர். இதில் ஷாரிக் மரியா ஜெனிபர் என்ற பெண்ணை திருமணம் செய்யவிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஷாரிக் மணப்பெண்ணுடன் லிப் கிஸ் கொடுத்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதனை பார்த்த நெட்டிசன்ஸ் ” என்ன இதோட நிறுத்திட்டீங்க…? பர்ஸ்ட் நைட் வரைக்கும் படப்பிடிச்சு காட்டுங்க என கலாய்த்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?