கட்டாயப்படுத்திய கவுண்டமணி.. அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் ஆணவத்தில் ஷர்மிலிக்கு ஆப்பு வைத்த நக்கல் மன்னன்..!

Author: Vignesh
27 June 2023, 4:45 pm

90 கால கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷர்மிலி. இவர் பல படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடியுள்ளார். சமீபத்தில் ஷர்மிலி வனிதா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அதில், அவர் தான் பாடல்களுக்கு நடனமாடும் பெண்ணாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியதாகவும், அந்த சமயத்தில் கவுண்டமணி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் வயது வித்தியாசம் காரணமாக நடிக்க மறுத்துவிட்டதாகவும், அதுமட்டுமின்றி தனக்கு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வராது என்றும், ஒரு படத்தில் கவுண்டமணி தனக்கு ஜோடியாக நடிக்க தன்னை புக் செய்து விட்டாராம்.

sharmili goundamani-updatenews360

அந்த படத்திற்கு பிறகு கவுண்டமணி உடன் இரண்டு படம் நடிக்க கூறியதாகவும், தானும் சரி என்று சொல்லி நடித்ததாகவும், சில படங்களில் கவுண்டமணி தன்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்ததாகவும், தான் நேரடியாக கவுண்டமணியிடம் சென்று இனி உங்களுடன் நடிக்க மாட்டேன் பட வாய்ப்புகளை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

sharmili goundamani-updatenews360

மேலும், அப்போதிலிருந்து கவுண்டமணி தனக்கு வரும் பட வாய்ப்புகளை இல்லாமல் செய்து விட்டதாகவும், தன்னுடைய சினிமா வாழ்க்கை மோசமாக போக கவுண்டமணி தான் காரணம் என்று ஷர்மிலி கவுண்டமணி மீதான புகார்களை அந்த பேட்டியில் அடுக்கிக் கொண்டு வந்தார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 606

    0

    0