அடுத்த வாரம் திருமணம்.. விபத்தில் சிக்கிய எங்கேயும் எப்போதும் பட பிரபலம்..!

Author: Vignesh
29 May 2023, 4:59 pm

தெலுங்கு சினிமாவில் சர்வானந்த் முக்கிய ஹீரோவாக இருந்து வருகிறார். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

மேலும், சர்வானந்த் ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா ஷெட்டி என்பவரை தான் திருமணம் செய் உள்ளார். இவர்களுக்கு வரும் ஜூன் 3ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் லீலா பேலஸில் திருமணம் நடைபெற உள்ளது.

sharwanand-updatenews360

இதனிடையே, திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி இவர் பயணித்த கார் அதிகாலை 2 மணிக்கு பிலிம் நகர் பகுதியில் சாலை நடுவில் இருக்கும் தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

sharwanand-updatenews360

இதனிடையே, காரில் இருந்த சர்வானந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். மேலும், போலீசாரும் விபத்து நடந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர். இந்தநிலையில், சர்வானந்த்துக்கு பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், நலமாக தான் இருக்கிறார் என தற்போது தகவல்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 339

    0

    0