என் iPhone கூட திருடிட்டாங்க – வேதனையுடன் பேசிய ஜெயம் ரவி!

Author:
19 October 2024, 3:50 pm

இளம் ஹீரோவாக வளர்ந்து கொண்டு இருந்த ஜெயம் ரவி ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் டாப் நடிகராகவும் இடத்தை தக்கவைத்துக் கொண்டார் ஜெயம் ரவி.

jeyam ravi

இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவிக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மகன்கள் பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து ஜெயம்ரவி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

குடும்பம் குழந்தைகள் என பிசியாக இருந்து கொண்டே திரைப்படங்களிலும் அதிக ஆர்வத்தை செலுத்தி நடித்த வந்தார். இதனுடையே திடீரென மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் ஜெயம் ரவி. அந்த அறிவிப்பு வெளியானதும் எல்லோருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும் நடிகை ஆர்த்தி இது குறித்து பேசும்போது எனக்கு விருப்பமே இல்லை எங்களிடம் கலந்து யோசிக்காமல் அவரது தனிப்பட்ட முடிவாக விவாகரத்தை அறிவித்திருக்கிறார் எனக் கூறி அதிர்ச்சி அளித்தார்.

jeyam ravi

அதை எடுத்து ஜெயம் ரவி என்னை ஆர்த்தி டார்ச்சர் செய்தார்…. மாமியார் பண விஷயத்தில் .என்னை ஏமாற்றினார் எனக்கென தனி வங்கி கணக்கு கூட இல்லை. நான் பத்து ரூபாய் செலவு செய்தால் கூட ஆர்த்தி கணக்கு கேட்பார் . மேலும் என்னுடைய அசிஸ்டன்ட் இடம் போன் பண்ணி யார் கூட இருக்கிறேன்? எங்க இருக்கிறேன்? என்ன செலவு செய்தார்? என கேள்வி கேட்டது எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. இதெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை இதனால் தான் விவாகரத்து என கூறி இருந்தார்.

இவர்களின் இந்த விவாகரத்து விவகாரம் இப்படி நாளுக்கு நாள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிலையில் நடிகர் ஜெயம் ரவி சமீபத்திய பேட்டி ஒன்றில் பணத்தின் தேவை குறித்து பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, பணத்தை பொருத்தவரை நான் சிறுவயதிலிருந்து நிறைய பணத்தை பார்த்திருக்கிறேன் .

விவாகரத்துக்கு பிறகு ஜெயம் ரவி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். அங்கே பாலிவுட் திரைப்படங்களின் நடிக்க ஆர்வத்தை காட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஹன்சிகாவுடன் எங்கேயும் காதல் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து பேசி இருக்கிறார். நாங்கள் செட்டில் எப்போதுமே ஹன்சிகாவை ஒரு குழந்தை போல்தான் பார்ப்போம்.

Hansika Motwani-updatenews360

அவர் சூட்டிங் இடைவேளையில் எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார். குறிப்பாக அவருக்கு கோக் என்றால் ரொம்ப பிடிக்கும். அவரின் பிறந்தநாளில் கூட நாங்கள் கோக் பாட்டில் போலவே கேக்கை வடிவமைத்து அவரது பிறந்த நாள் ஸ்பெஷலாக கேக் வெட்டினோம்.

ஒருமுறை நான் இந்தியாவில் யாரும் வைத்து இல்லாத ஐபோனை பிரான்சில் வாங்கி இருந்தேன். அப்போது நான் அதை வைத்துக்கொண்டு ஓரமாக வந்து எதையோ போனில் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு உருவம் வந்து என் போனை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டது. திரும்பி பார்த்தால் ஹன்சிகா. அவர் தான் என்னுடைய போனை பிடிங்கிக்கொண்டு ஓடிவிட்டார்.

இதையும் படியுங்கள்: மும்பையில் அந்த நடிகையுடன் சூர்யா.. மாயமான ஜோதிகா? வைரலாகும் வீடியோ!

அந்த அளவுக்கு அவர் குழந்தைத்தனமாக செட்டில் நடந்து கொள்வார் என அந்த பேட்டியில் ஜெயம் ரவி கூறி இருக்கிறார். மேலும், பேசிய அவர் இப்போதும் ஹன்சிகாவின் குணம் அப்படியேதான் இருக்கிறது என்று பேசி இருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இருவரும் மீண்டும் படம் நடிக்க வேண்டும் இந்த சிறந்த ஜோடியை திரையில் பார்த்த ஆசை என கூறி வருகிறார்கள்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 247

    0

    0