இறந்து ஒரு வாரம் ஆகிடுச்சு.. உன் முகத்தைக் கூட பார்க்க முடியலையே.. தந்தையை இழந்து வாடும் ஷெரின்..!
Author: Vignesh6 June 2024, 3:47 pm
தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால், தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின். மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது. இந்நிலையில், கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கம்பேக் கொடுத்து இருந்தார்.
மேலும் படிக்க: மூளை நரம்பில் ஏற்பட்ட பிரச்சனை.. கை விரித்த டாக்டர்; வேதனையை பகிர்ந்த விஜய் டிவி நடிகை..!
தற்போது, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஷெரின் அப்பாவை இதுவரை அவர் நேரில் பார்த்ததே இல்லையாம். அவரது அன்புக்காக காலம் முழுக்க அவர் ஏங்கி இருந்ததாகவும், ஆனால் கடந்த வாரம் அப்பா இறந்துவிட்டார் என்கிற தகவல் தற்போது தான் அவருக்கு தெரியவந்திருக்கிறது. அதை பற்றி மிகவும் உருக்கமாக கலங்கி அவர் பதிவிட்டு உள்ளார்.