என் உடலை தானம் செய்கிறேன்..ஆனால் ‘இதயம்’..ஷிஹான் ஹுசைனி உருக்கமான வேண்டுகோள்.!

Author: Selvan
20 March 2025, 12:49 pm

மருத்துவ ஆராய்ச்சிக்காக உடல் தானம்

மதுரையைச் சேர்ந்த கராத்தே மற்றும் வில்வித்தை மாஸ்டரும்,நடிகருமான ஷிஹான் ஹூசைனி தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.மேலும்,தனது இதயத்தை தனது மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படியுங்க: என்னங்க சொல்றீங்க? த்ரிஷா படைத்த உலக சாதனை.. ஆனால் ‘அது’..!

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஹூசைனி,தனது ஃபேஸ்புக் பதிவில்,மருத்துவம்,உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக என் உடலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானமாக வழங்க விரும்புகிறேன்,எனது உயிர் பிரிந்த மூன்று நாட்களுக்கு பிறகு,உடனடியாக கல்லூரி அதிகாரிகள் வந்து என் ஒப்புதலையும்,கையொப்பத்தையும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும்,என் இதயத்தை மட்டும் என் கராத்தே வில்வித்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என உணர்ச்சிப் பொருந்திய கருத்தை பகிர்ந்துள்ளார்.

சிறந்த கராத்தே பயிற்சியாளராகவும்,400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களை உருவாக்கிய பயிற்சியாளராகவும் விளங்கிய ஹூசைனி,தனது வாழ்க்கையை முழுமையாக கலைக்கு அர்ப்பணித்துள்ளார்.புன்னகை மன்னன் மற்றும் பத்ரி போன்ற திரைப்படங்களிலும் அவர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தனது உடலை தானமாக வழங்குவதன் மூலம்,மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி,தனது இறப்பிற்குப் பிறகும் சமூகத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.அவரது இந்த உயரிய செயல் அனைவருக்கும் ஒரு மாபெரும் உதாரணமாக அமைந்துள்ளது.

  • எல்லா படங்களும் விரும்பி நடிக்கல…ரகசியத்தை உடைத்த நடிகை ரேவதி.!
  • Leave a Reply