ஷில்பா ஷெட்டியின் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு இத்தனை கோடிகளா?.. வாயடைத்த ரசிகர்கள்…!

Author: Vignesh
10 January 2024, 4:12 pm

என்றும் 16 என்று சொல்லக் கூடிய அளவுக்கு, தமிழ் திரையுலகிலும் பரிச்சயமான, 90 களில் பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட இந்த பாலிவுட் நடிகை இன்றும் அதே இளமை மாறா தோற்றத்தில் ஆரோக்கியமாகக் காட்சியளிக்கிறார். 48 வயதாகும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

shilpa shetty - updatenews360

இந்நிலையில், 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏழு ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஹங்கமா 2 படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். தற்போது, கன்னடத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஹிந்தியில் மிகவும் பிரபலமான இவர் பிரபுதேவாவின் மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியிருந்தார்.

இதன் பின் விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்நிலையில், மும்பையில் 100 கோடி செலவில் பிரம்மாண்ட பங்களா கட்டியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது, வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

shilpa shetty
shilpa shetty
  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 358

    0

    0