அரிய வகை நோய்.. நிச்சயத்துடன் நின்று போன ‘பீஸ்ட்’ பட நடிகரின் திருமணம்..!

Author: Vignesh
8 August 2024, 11:50 am

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தமிழில் வெளியான பீஸ்ட் படத்தில் தீவிரவாதியாக நடித்தவர். கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் அரசியல்வாதியாக நடித்திருந்தார். தெலுங்கில், தற்போது நடித்து வருகிறார். இவர் கவிதா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

அதனை தொடர்ந்து, தனது நீண்ட நாள் தோழியான தனுஜா என்ற மாடலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இருந்தது.

சமீபத்தில், அதை அவர் அவருடைய சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கி இருந்தார். இதனால், பிரிந்து விட்டதாக செய்தி வெளியானது. சமீபத்தில், அளித்த பேட்டியில் அதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார். இப்போது, சிங்கிளாகத்தான் இருக்கிறேன் அதிகமாக அன்பு வைத்திருந்தாலும், அந்த காதலை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

ஒரு உறவை பேணுவதற்கு ஒருவரை விரும்புவது மட்டும் போதாது. தற்போது, டேட்டிங் ஆப்பை பயன்படுத்துகிறேன். அதில், இருப்பது நான் தான் என்பதை நம்ப மறுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அவரை நேசித்தது போல நான் யாரையும் நேசித்ததில்லை. சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது.

அதனால், இது பற்றி பேச விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும், தனக்கு ஏடிஹெச்டி (கவனக்குறைவு அல்லது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்கிற நோய்) வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ’வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு பாதிப்பாக தெரியும் என்றும், ஆனால் உண்மையில் இது எனக்கு பயனுள்ள விஷயம். கறை நல்லது என்று சொல்வார்கள். இந்த பாதிப்பு உள்ளவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க மிகவும் முயற்சிப்பார்கள்’ என்று கூறி இருக்கிறார். முன்னதாக, இந்த நோய் ஃபகத் பாசிலுக்கும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 125

    0

    0