நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்
Author: Prasad17 April 2025, 5:27 pm
உலக நாயகன்
உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட் பாயாக வலம் வந்த கமல்ஹாசனை ரசிக்காத பெண்களே கிடையாது என்று கூறலாம். இந்த நிலையில்தான் கமல்ஹாசனை தான் ரசிக்கும் விதத்தை வெளிப்படையாக கூறி ட்ரோலுக்குள்ளாகியுள்ளார் ஒரு முன்னணி நடிகர்.

கன்னட சூப்பர் ஸ்டார்
கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் சிவராஜ்குமார். இவர் தமிழில் “ஜெயிலர்”, “கேப்டன் மில்லர்” ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய சிவராஜ்குமார் கமல்ஹாசனை குறித்து பேசியது கிண்டலுக்குள்ளாகி வருகிறது.

“எனக்கு கமல்ஹாசனை மிகவும் பிடிக்கும். கமல்ஹாசன் என்றால் அழகு. நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமல்ஹாசனை திருமணம் செய்திருப்பேன்” என்று கூறினார். சிவராஜ்குமாரின் இந்த பேச்சு செய்திகளாக வெளியாக தமிழகத்தைச் சேர்ந்த பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். எனினும் அவர் கமல்ஹாசன் மீதான அன்பைதான் அவ்வாறு சொல்கிறார், அவரை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் ஒரு பக்கம் சிலர் கூறி வருகின்றனர்.