குழந்தை பெத்துக்க ஆசையா இருக்கு… வரபோற புருஷன் இப்படி தான் இருக்கனும் – ஷிவாங்கி Open Talk!

Author: Shree
22 April 2023, 9:18 pm

பேசும் போது கீச் கீச் குரலும் பாடும்போது குயில் போன்ற குரலும் கொண்ட வித்தியாசமான திறமை கொண்டவர் ஷிவாங்கி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இவரது குரலுக்கும் வெகுளித்தனமான பேச்சுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பிரபலத்தை வைத்து ‘குத் வித் கோமாளியில்’ வாய்ப்பு கிடைத்தது. அதில் கோமாளியாக தன்னுடைய நகைச்சுவையான திறமையால் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

விஜய் டிவியில் கிடைத்த புகழ் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் பாடவும், நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து மக்களை மகிழ்வித்தார். இந்நிலையில் தற்போது திருமணம் குறித்து CWC நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதாவது, மோனிஷா இன்னும் 5 வருடங்களில் திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என சொல்ல உடனே ஷிவாங்கி எனக்கும் ஆசையா தான் இருக்கு ஆனால், எனக்கு வரும் புருஷன் calm ஆக ஒழுங்காக இருக்கும் நபராக இருந்தால் நல்லா இருக்கும். அதே நேரத்துல எனக்கு குழந்தை பிறந்தால் அதை எப்படி வெச்சி மேய்க்குறது?’ என Funnyஆக கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி