பிரபலத்தின் மகனுடன் நெருக்கமாக ரொமான்ஸ் பண்ணும் ஷிவாங்கி… காதலா இருக்குமோ?
Author: Shree31 October 2023, 4:23 pm
பேசும் போது கீச் கீச் குரலும் பாடும்போது குயில் போன்ற குரலும் கொண்ட வித்தியாசமான திறமை கொண்டவர் ஷிவாங்கி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இவரது குரலுக்கும் வெகுளித்தனமான பேச்சுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பிரபலத்தை வைத்து ‘குத் வித் கோமாளியில்’ வாய்ப்பு கிடைத்தது. அதில் கோமாளியாக தன்னுடைய நகைச்சுவையான திறமையால் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். விஜய் டிவியில் கிடைத்த புகழ் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் பாடவும், நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து மக்களை மகிழ்வித்தார்.
இந்நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹஷ்வர்த்துடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி காட்டு தீயாய் பரவி வருகிறது. இதனை கண்டு நெட்டிசன்ஸ் ஒரு வேலை காதலா இருக்குமோ? என சந்தேகித்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பாடல் பாடியபோது காதல் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.