CWC-யில் நடப்பது இதுதான்.. தெரியாம பேசாதீங்க Please..- சிவாங்கி வெளியிட்ட உருக்கமான பதிவு..!
Author: Vignesh12 April 2023, 10:30 am
குக் வித் கோமாளி 4வது சீசன் படு ஜோராக தொடங்கியது. விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் முடிந்த கையோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடங்கிவிட்டார்கள். புத்தம்புது போட்டியாளர்கள், கோமாளி சிலர் என தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 20 எபிசோடுகளை கடந்து முடித்துவிட்டது.
இதனிடையே, கடந்த வார நிகழ்ச்சியும் மிகவும் கலகலப்பாக சென்றது, ஆனால் கடைசியில் விஜே விஷால் எலிமினேட் ஆனதால் ரசிகர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியது.விஜய் டிவியில் நம்பர் 1 ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த சீசனில் 10 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரை மூன்று பேர் எலிமினேட் ஆன நிலையில், விஜே விஷாலும் எதிர்பாராத விதமாக வெளியேறினார். அவரின் வெளியேற்றத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் குக் வித் கோமாளி 4வது சீசனில் ஷெரின், ஸ்ருஷ்டி, சிவாங்கி ஆகியோரை வேண்டுமென்றே காப்பாற்றி வருவதாக நிகழ்ச்சி குழுவினர்களை நெட்டிசன்கள் வறுத்தெடுத்த நிலையில், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக சிவாங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது, இந்த சீசன் ஆரம்பத்தில் தன்னுடைய சமையல் பற்றி பலருக்கும் குழப்பங்கள் இருந்து வருகிறது.
தான் மட்டுமில்லை தன்னுடன் பயணிக்கும் அனைத்து போட்டியாளர்களும் ஷூட்டிங்க்கு முதல் நாளிலே சமையல் செஞ்சு பார்த்து கொள்கிறோம் என்றும், தாங்கள் உங்களை என்டேர்டைன்மெண்ட் செய்வதற்காக மட்டுமே இவ்வளவு பாடு படுகிறோம் என்றும், எனவே ஒருவரின் உழைப்பை உதாசீன படுத்தாதீர்கள் என்றும், ஜாலியாக இருங்கள் என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Okay….so a lot of confusion since the season has started on how I can cook😂I train 6 to 7 hours a day prior the shoot to learn .Not only me. All the cooks there. So much of sacrifice from the daily routine has been done to showcase our best.
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) April 9, 2023