நடிகர் சிவராஜ்குமார் எப்படி இருக்கிறார்…அமெரிக்காவில் இருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!

Author: Selvan
27 December 2024, 2:23 pm

சிறுநீர்ப்பையை அகற்றிய மருத்துவர்கள்

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் இருப்பது சமீபத்தில் உறுதியானது.இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியாகி சோகத்தில் மூழ்கியது.

Shivrajkumar Surgery Success

ரசிகர்கள் பலர் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை பண்ணி வருகின்றனர்.இந்த நிலையில் சிகிச்சைக்காக தனது மனைவி மற்றும் மகளுடன் அமெரிக்கா சென்று அங்கே உள்ள “மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில்” அறுவை சிகிச்சை செய்ய போவதாக பெங்களூர் விமானநிலையத்தில், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

அதன்படி கடந்த 25 ஆம் தேதி அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாக மருத்துவர் மனோகர் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: அட்டகாசகமாக வெளிவந்த விடாமுயற்சி “Sawadeeka”பாடல்…இருங்க பாய் இது ஆரம்பம் மட்டும் தான்..!

மேலும் அந்த வீடியோவில் சிவராஜ்குமாரின் சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு,அவருடைய குடலின் ஒரு பகுதியை பயன்படுத்தி செயற்கை சிறுநீர்ப்பை பொறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.அறுவைசிகிச்சைக்கு பின்பு அவர் நலமுடன் இருப்பதாகவும்,சிறிது நாட்கள் ஓய்வு தேவைப்படுவதால்,அவர் அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ளார் என்ற தகவலையும் தெரிவித்தார்.

மேலும் சிவராஜுக்குமாரின் மனைவி அவருக்காக பிரார்த்தனை பண்ண அணைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களுடைய நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 78

    0

    0

    Leave a Reply