தந்தை தாயை அவமதித்த விஜய்?.. ரசிகர்களால் வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
13 July 2023, 6:16 pm

கடந்த உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகளை பெற்றனர். அவர்களை நடிகர் விஜய் நேரில் வரவழைத்து பாராட்டியதுடன், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் சில அட்வைஸ்களை கொடுத்து அனுப்பினார்.

எனவே, விஜய் மக்கள் இயக்கம் வரும் காலங்களில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற் போலவே, விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக தொடங்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய நடிகர் விஜய்யை பின்தொடர்பவர்கள் குவிந்து வருகின்றனர்.

Vijay - Updatenews360

இந்த நிலையில், விஜய் தன் பெற்றோர்களை கைவிட்டார் என்றும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், செய்திகள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விஜய் தன் அம்மா ஷோபா வாங்கி தந்த சட்டையை போட்டு வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு விஜய் அம்மா ஷோபா தனியார் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்து கொண்டு இருக்கையில், விஜய்க்கு ஒரு சட்டை வாங்கி இருப்பதாகவும், தான் என்ன எடுத்துக் கொடுத்தாலும் விஜய் அணிந்து கொள்வார் என்றும், கூறி 42 சைஸ் சட்டையை எடுத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணைத்தல் வைரலாகி வருகிறது. இதற்கு விஜய் ரசிகர்கள் என்னெல்லாம் சொன்னீங்க இப்ப பாருங்க எங்க தளபதிய என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி