பால்முகம் காணவே நான் தவித்தேன்… மகன் விஜய்யை நினைத்து உருகி பாடிய: ஷோபா சந்திரசேகர் – வீடியோ!

Author: Shree
15 May 2023, 5:06 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் மிகப்பெரும் நட்சத்திர பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் கடைசியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் வரும் கதை போலவே அவரது சொந்த வாழ்க்கையும் தாய், தந்தையுடன் பேசாமல் இருக்கிறார்.

குடும்ப சண்டையெல்லாம் படமெடுத்து எங்க உசுர ஏன் வாங்குறீங்க என என நெட்டிசன்ஸ் பலர் விமர்சித்தனர். முதலில் உங்க அப்பா, அம்மாவை மதியுங்கள் அப்புறம் அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம் என சிலர் கூறினார். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களோடு ரசிகராக விஜய்யின் அப்பா மற்றும் அம்மா அவரை கைகுலுக்கி நலன் விசாரித்தது பேசுபொருளானது. இதனால் விஜய்யின் நடத்தை சரியில்லை என எல்லோரும் அவரை விமர்சித்தனர்.

தற்போது விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறர். அண்மையில் விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது பெற்றோரின் 50வது திருமண நாள் விழாவை கொண்டாடும் விதமாக விஜய் அவர்களது வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவரது அப்பா இல்லை என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இப்படி விஜய் தொடர்ந்து பெற்றோர்களை மதிக்கவில்லை என தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாரிசு பாடலாக, “ஆராரிரோ கேட்குதம்மா” பாடலை பாடி இருக்கிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/shorts/CvgKzf4szMM
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?