சினிமாவில் கொடிக்கட்டி பறந்த பிரபலங்கள் பின்னர் எந்த தகவலும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால் பெற்றோர்களும் இல்லாமல், குடும்பமும் இல்லாமல் தன்னந்தனிமையில் வாழ்ந்து வருபவர் நடிகை கனகா.
தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் சினிமா மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை கனகா. இவர் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை. மேலும், இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை தெரியவில்லை.
முன்னர் நடிகை கனகா பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் பேசிய நடிகை கனகா , எனக்கு தற்போது படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.
ஆனால், எனக்கு இப்போது 50 வயது கிட்ட ஆக இருப்பதால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதற்கு பலர் ஆறுதலாக நம்பிக்கையூட்டும் வகையில் பேசியிருந்தனர்.
சொத்து விவகாரத்தில் அப்பாவுடன் பிரச்சனை, கை கூடாத காதல், கை விட்ட கணவர், பல வருடங்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் தனிமை வாழ்கை என பல துயரங்களை சந்தித்துள்ளார் நடிகை கனகா.
இதனிடையே, புற்று நோயால் பாதிக்கப்பட்டு கனகா இறந்து விட்டதாக பல வதந்திகள் வந்தபடியாக இருந்தன. ஆனால் அதனை மறுத்து தன்னுடைய தனிமை வாழ்கையினை கடத்தியுள்ளார் நடிகை கனகா.
மேலும் சொத்துக்களை தன்னிடம் இருந்து யாரவது பறித்து விடுவார்களோ என்ற அச்சத்திலேயே வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்கி வந்துள்ளார் கனகா என்று கூறப்படுகிறது.
முன்னதாக, கனகாவின் அம்மா தேவிகா மரணம் கனாகவை மிகவும் சோகமாக்கியது. அவரின் வாழ்க்கையே இருண்ட நிலைக்கு செல்ல, அந்த நேரத்தில் கனகாவிற்கு மேனஜேராக ஒருவர் வந்தார்
பின்னர், அவர் வந்த பிறகு கனகா மீண்டும் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி நன்றாக தான் சென்றார்.
அந்த மேனஜருக்கு கனகா மேல் ஒரு தலை காதல் இருந்துள்ளது, அதை அவர் சொல்ல வருவதற்கு முன்பே, கனகா, இவர் நம்மிடம் வேறு விதமாக தவறாக நடந்துக்கொள்ள முயற்சிக்கிறாரோ என்று எண்ணி அவரை திட்டி வெளியேற்றி உள்ளார்.
இதனிடையே, காலம் கடந்து அந்த நபர் மரணமடைய, கனகாவிற்கு இந்த உண்மைகள் தெரிய வர, நல்ல வாழ்க்கையையும், நல்ல நபரையும் இழந்துவிட்டோமே என்று மிகவும் நொந்துள்ளார்.
இதனிடையே, கமலோடு நடிகை கனகா நடிக்காததற்கு காரணம் அவருடைய அம்மா எடுத்த முடிவுதான் என்றும், அது தன்னுடைய மகளின் இமேஜை பாதித்துவிடும் என்று அவர் நினைத்ததால் நடிக்க வைக்க வில்லையாம். பிறகு கனகாவுக்கு காதல் ஏற்பட்டது அவர் யாரை காதலித்தார் என்பது இன்னும் யாருக்கும் தெரியாத ரகசியமாகவே இருக்கிறது. தற்போது வரை கனகாவின் வாழ்க்கை ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. அவர் எப்போதும் தனியாக இருப்பதையே விரும்புகிறார். காரணம் அவர் அவருடைய காதலனுக்காக இன்னமும் காத்திருக்கிறார் என்பதுதான் அதற்கு பதிலாக இருக்கும் என பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் "சர்தார் 2" திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா…
திண்டுக்கல் தியேட்டரில் பரபரப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம்,தனது புதிய திரைப்படமான "வீர தீர சூரன்" வெளியானதை முன்னிட்டு,திண்டுக்கல்…
ஹீரோவாக நடிக்கிறார் VJ சித்து தற்போதைய சினிமா உலகில்யூடியூப் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பிரபலமானவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.அந்த…
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
This website uses cookies.