நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் ஜெயில்.. நீதிமன்றம் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு..!

Author: Vignesh
11 August 2023, 12:30 pm

இந்திய சினிமாவில் 70 மற்றும் 80 காலகட்டங்களில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. தெலுங்கு திரைப்படமான பூமி கோஷம் என்ற திரைப்படத்தில் மூன்று நிமிடம் நடனக்காட்சியில் அறிமுகமானவர் ஜெயப்பிரதா. இவர் 1976 ஆம் ஆண்டு பாலச்சந்திரனின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Jaya Prada -updatenews360

கமல் ரஜினி ஆகியோருடன் இணைந்து நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் போன்ற பல படங்களில் ஜெயப்பிரதா நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர்.

Jaya Prada -updatenews360

இவர் பல்வேறு மொழிகளில் 280 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் சிறந்து விளங்கிய ஜெயப்பிரதா பரதநாட்டிய கலைஞராகவும் சாதனை செய்துள்ளார். இவர் தற்போது அரசியலில் குதித்து அதில், தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

Jaya Prada -updatenews360

இந்நிலையில், நடிகை ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்திருந்த நிலையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, இந்த வழக்கின் விசாரணையை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 513

    0

    0