28-வயதில் தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்..!

Author: Vignesh
2 May 2024, 12:53 pm

பொதுவாக திரையுலகில் சாதிக்க வேண்டுமென நினைப்பவர்கள் அனைவருக்கும் அதற்கான வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை. அப்படித்தான் பல சவால்களை கடந்து தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் வாய்ப்பை பெற்றவர் பிரவீன் குமார். இராக்கதன், மேதகு போன்ற படங்களுக்கு பிரவீன் குமார் இசையமைத்துள்ளார்.

praveen kumar

மேலும் படிக்க: அட.. டக்குனு பார்த்த வனிதா பொண்ணு மாதிரி இருக்காங்களே.. ஜோவிகாவை உரித்து வைத்திருக்கும் இளம் பெண்..!

இவரின் இசை தனித்துவமாக பார்க்கப்பட்டது. சில பிரபலங்கள் பிரவீன் குமார் இசை துறையில் அசைக்க முடியாத இடத்தை பிடிப்பார் என்று பாராட்டியதும் உண்டு. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

praveen kumar

மேலும் படிக்க: மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியா இது? அழகிய ஃபேமிலி போட்டோ இதோ..!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு உடல்நலம் குன்றியதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மரணமடைந்தார். ஆனால் இவருக்கு என்ன பிரச்சனை இருந்தது என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இவரின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் இருந்து இன்று 02:05: 2024 மாலை 6 மணியளவில் வடக்கு வாசல் அவரது இல்லத்திலிருந்து புறப்பட இருக்கிறது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…