இந்த அசிங்கம் தேவையா? விழாவில் ராஷ்மிகாவை அவமதித்த பிரபல நட்சத்திர நடிகை (வீடியோ)

Author: Shree
20 September 2023, 6:15 pm

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி தினத்தில் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் ஒன்று கூடி வழிபட்டனர். அப்போது நடிகை ராஷ்மிகா போட்டோவுக்கு போஸ் கொடுக்க நின்றுக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா கபூருக்கு சிரித்தபடி ஹாய் சொன்னார்.

ஆனால், அதை ஷ்ரத்தா கபூர் கண்டும் காணாமல் சென்றுவிட்டார். அது ராஷ்மிகாவுக்கு பயங்கர நோஸ்கட் ஆகியிருந்தாலும் அதை சிரித்துக்கொண்டே மழுப்பிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக பொறாமையில் தான் ஷ்ரத்தா கபூர் இப்படி நடந்துக்கொண்டார் என பாலிவுட் ரசிகர்கள் கூறுகிறார்கள். ஆனால் தென்னிந்திய ரசிகர்கள் நீ ஒரு “cringe” அதான் உன்னை அவாய்ட் பண்ணிட்டு போறாங்க என விமர்சித்துள்ளனர். இதோ அந்த வைரல் வீடியோ:

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 312

    0

    0