தமிழில் பாடுவது சிரமம்தான்.. பிரபல பாடகி பேச்சு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
Author: Hariharasudhan20 February 2025, 9:41 am
தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பாடுவது சிரமம்தான் என பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பாடி தேசிய அளவில் புகழ்பெற்ற பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். இந்த நிலையில், இவரின் இசை நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில், பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் கலந்து கொண்டு பேசினார். முதலில், தமிழில் தனக்குப் பிடித்த பாடல் என முன்பே வா,..அன்பே வா.. பாடலைப் பாடிக் காட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய அப்பா விஞ்ஞானியாக இருந்தாலும், நான் இசைத் துறையில் வந்தது ஆச்சரியமானதுதான்.
ஆனால், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பாடுவதுதான் எனக்கு மிகவும் சிரமமான ஒன்று” எனத் தெரிவித்தார். இதனால், ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர். காரணம், தமிழ், மலையாள மொழிகளில் பாடல் பாடுவது சிரமம் என்றாலும், அவரது குரலுக்காக ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ரசிகர் ப்ரபோஸ்: முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இசைக் கச்சேரியில், கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகர், “ஸ்ரேயா, நீங்கள்தான் என்னுடைய இரண்டாவது காதல்” என தான் கையில் வைத்திருந்த பதாகையில் குறிப்பிட்டிருந்தார். உடனே அந்த ரசிகரிடம், அப்போது முதல் காதல் யார் என ஸ்ரேயா கோஷல் கேட்டார்.
இதையும் படிங்க: ’சூரியன உதயநிதி பார்த்ததே இல்ல’.. ’தற்குறிகள்’.. அண்ணாமலை கடும் விமர்சனம்!
அதற்கு, அந்த ரசிகர் தனது அருகில் அமர்ந்திருந்த காதலியைக் காண்பித்தார். பின்னர், அனைவரின் முன்பாகவும் அவரிடம் கல்யாணத்துக்கு ப்ரபோஸ் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, தனது காதலிக்கு மோதிரத்தை அணிவித்த அந்த காதலனுக்காக, ஸ்ரேயா கோஷல் பாட்டு பாடினார்