சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ “வழக்கு எண் 18/9” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே மிகவும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அசரவைத்தார் ஸ்ரீ.
அதனை தொடர்ந்து “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “வில் அம்பு”, “மாநகரம்” போன்ற திரைப்படங்களில் நடித்த ஸ்ரீ, திடீரென சினிமாவில் நடிப்பதில் இருந்து பல ஆண்டுகள் விலகி இருந்தார். அதன் பின் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் “இறுகப்பற்று” திரைப்படத்தில் நடித்தார்.
எனினும் அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் அமையவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கின. மிகவும் ஒல்லியாக எலும்பும் தோலுமாக தென்படுகிறார் ஸ்ரீ. அதுமட்டுமல்லாது ஆபாசமான ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி போதை வஸ்துக்கு அடிமையானதால் இவ்வாறு ஆகிவிட்டார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீயின் நெடுநாள் தோழியான Dotty David சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அதில் அவர் ஸ்ரீயின் இந்த நிலை குறித்து பல அதிர்ச்சியான விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“ஸ்ரீ முதலில் நன்றாக கலகலவென பேசக்கூடிய நபராக இருந்தான். ஆனால் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்திற்குப் பிறகு அவர் இலகுவாக பழகுவதை நிறுத்துக்கொண்டான். வீட்டிற்குள்ளேயே அடங்கிக்கிடக்க தொடங்கினான். நான்கு சுவற்றை விட்டு வெளியே வரவே அவனுக்கு பிடிக்கவில்லை. சில நேரம் அவனுக்கு பேசவேண்டும் என தோன்றினால் வீட்டிற்கு வருவான். சில நாட்கள் தொடர்ந்து வருவான், ஒரு கட்டத்தில் வருவதை நிறுத்திக்கொண்டான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவனுக்கு மனநிலை சரியில்லாமல் வெளியே வந்தான். அதனை பார்த்து நான் நொந்தே போய்விட்டேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவன் வெளிவந்த பிறகு அவனுடன் நான் பல மாதங்கள் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். ஆனால் அவனை என்னால் தொடர்புகொள்ளவே முடியவில்லை.
அதன் பிறகுதான் தெரியவந்தது, அவன் மன அழுத்தத்தில் இருக்கிறான் என்று. அவன் அதற்கான மருந்துகளையும் எடுத்துக்கொள்கிறான் எனவும் தெரிய வந்தது. அவனுக்கு வந்தது சாதாரண மன அழுத்தம் இல்லை. அது அளவுக்கு மீறிய மன அழுத்தம் என தெரிய வந்தது.
ஒன்றரை வருடம் முன்பு எனக்கு போன் செய்து 2000 ரூபாய் கேட்டான். ஏன் என கேட்டதற்கு குடும்பத்தில் இருந்து தனியாக வாழத் தொடங்கிவிட்டேன் என கூறினான்.
அவன் சொந்தமாக கதை எழுதி படம் இயக்க வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருந்தான். அவனுக்கு நடிப்பையும் விட அதுதான் பிடித்திருந்தது. பொடன்சியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் கதைகளை ரிவ்யூ செய்து தேர்வு செய்யும் பணியில் அவன் இருந்தான். ஆனால் திடீரென்று அவன் எங்களிடம் வேலை வாங்கி கொடு என்று கேட்டான். அதற்கு நாங்கள் நீ ஏன் படங்களில் நடிக்க மாட்டிக்கிறாய் என்று கேட்டோம். அப்போதுதான் அவன் உண்மையை சொன்னான். ‘எனக்கு கேமரா முன் நிற்பதற்கு என்னால் முடியவில்லை’ என கூறினான். சினிமா ஷூட்டிங்கில் அத்தனை கூட்டத்திற்கு முன்பு அவன் நடிப்பதற்கு அவனுக்கு Comfortable ஆக இல்லை” என்று மிகவும் மன வேதனையுடன் ஸ்ரீயின் தோழி பகிர்ந்துகொண்டார்.
மேலும் அவர் “ஸ்ரீக்கு வில் அம்பு திரைப்படத்தில் இருந்து சம்பளம் வரவில்லை. பொடன்ஷியல் ஸ்டூடியோஸில் இருந்தும் சம்பள பாக்கி உள்ளது. அவனுக்கு பிக்பாஸில் இருந்து கூட இன்னும் சம்பளம் வரவில்லை” என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.