ஐட்டம் பாட்டுக்கு ஆடணுமா? பணப்பெட்டி எடுத்துட்டு வாங்க – எத்தனை கோடி தெரியுமா?
Author: Shree24 April 2023, 2:10 pm
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகி பின்னர் மழை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக நடிக்க தொடங்கியவர நடிகை ஸ்ரேயா சரண். நல்ல அழகு துரு துரு நடிப்பு என அறிமுகமான புதிதிலே அத்தனை ரசிகர்களையும் வளைத்துவிட்டார்.
தெலுங்கு , தமிழ் , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார். இதனிடையே திடீரென 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை காதலித்து ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர், கப்சா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் போலா ஷங்கர் என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாட்டுக்கு கவர்ச்சியாக ஆட ஸ்ரேயா சரண் ரூ. 1 கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை ஓடவிட்டுள்ளார். இருந்தாலும் அவரது கவர்ச்சி அழகுக்கு மவுஸ் கிடைக்கும் என்பதால் வேறுவழி இல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளதாம் படக்குழு.