நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் என்னுடைய அப்பா கமல் ஹாசனின் அந்த விஷயத்தை நான் அறவே வெறுத்து விட்டேன். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என கூறி இருக்கும் விஷயம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது கமல் ஹாசனும் சரிக்காவும் எனது பெற்றோர்களாக இருப்பது எனது பெருமை தான் .
இருந்தாலும் எனது தந்தையின் புகழ் சில நேரங்களில் எனக்கு பெரும் சுமையாக இருக்கிறது வளர்ந்து வரும் காலத்தில் எனது தந்தை பற்றிய கேள்வி என்னை அதிகமாக பாதித்தது. பலரும் என்னை கமலின் மகள் என்று குறிப்பிட்டார்கள்.
அது வித்தியாசமான அடையாளத்தை கொடுத்தாலும் நான் ஸ்ருதிஹாசன். எனக்கான அடையாளம் எனக்கு தேவை என நினைத்தேன். யாராவது கேட்டால் இல்லை எனது அப்பா டாக்டர் ராமச்சந்திரன் நான் பூஜா ராமச்சந்திரன் என்று தான் சொல்வேன்.
ராமச்சந்திரன் என்பவர் எங்களது பல் மருத்துவர். எனது தந்தையும் தாயும் பிடிவாதமான நபர்களாக இருந்தார்கள். அவர்களால் நாங்கள் வளர்க்கப்பட்டோம். தாயும் தந்தையும் பிடிவாதமான நபர்களாக இருந்ததால் என்னையும் என் தங்கையையும் அது கடுமையாக பாதித்தது. பெற்றோர்களை பிரிந்த பிறகு நான் மும்பைக்கு குடிபெயர்ந்தேன்.
சென்னைக்கு வெளியே வாழ்க்கையை அனுபவிக்க அது எனக்கு வாய்ப்பாக அமைந்தது. ஏனென்றால் என் தந்தையின் புகழ் வெளிச்சத்தில் இருந்து தப்பிக்க அது சாத்தியமாக இருந்தது.
அதன் காரணத்தாலே சென்னை எனக்கு பிடிக்கவில்லை. இங்கு இருப்பவர்களை வெறுப்பாக உணர்ந்தேன். இருந்தாலும் தந்தையால் எனக்கு கிடைக்கும் பெருமையை நான் பெற்றுக் கொள்கிறேன். எனினும் எனக்கான தனி அடையாளத்தை நான் தேடிக் கொண்டு தற்போது வரை பயணித்துக் கொண்டிருக்கிறேன் என ஸ்ருதிஹாசன் கூறி இருக்கிறார்.