உண்மை இதுதான்..இன்ஸ்டாவில் நடிகை திடீர் போஸ்ட்..காட்டு தீயாய் பரவும் அந்தரங்க வீடியோ.!

Author: Selvan
27 March 2025, 7:49 pm

நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணின் ஆபாச வீடியோ இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

இதையும் படியுங்க: ஃபயர் மோடில் ‘ராம் சரண்’…பிறந்தநாள் பரிசாக படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்.!

2023 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிய சிறகடிக்க ஆசை சீரியல், தற்போது மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.இந்த தொடரில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, சால்மா அருண், அனிலா குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில்,நடிகை ஸ்ருதி நாராயணனின் வீடியோ காலில் பேசும் அந்தரங்க வீடியோ இணையத்தில் வைரலானது.இதை சிலர் மார்பிங் வீடியோ என கூறினாலும்,மற்ற சிலர் கேஸ்டிங் கவுச்ச் சம்பவம் என பரப்பினர்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராம்,எக்ஸ்,டெலிகிராம் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த வீடியோ வெளியான பிறகு ஸ்ருதி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரைவேட்டாக மாற்றினார்,இதனால் ரசிகர்கள் மேலும் குழப்பமடைந்தனர்.
ஆனால் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தை மீண்டும் பொது பயன்பாட்டிற்கு மாற்றி,புதிய போட்டோஷூட் படங்களை பகிர்ந்து உள்ளார்.

மேலும்,அவர் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் ஏ.ஐ டெக்னாலஜி பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முகங்களை ஒப்பிட்டு “உண்மையானது எது?” எனக் கேட்டு ஒரு ரீல்ஸ் வீடியோ பகிர்ந்துள்ளார்.இதன் மூலம், தன்னைப்பற்றி பரவி வரும் வீடியோ மார்பிங் செய்யப்பட்டதுதான் என்பதை மறைமுகமாக ஸ்ருதி விளக்கி இருக்கிறார்.

இந்த விவகாரம் பற்றி விஜய் டிவி மற்றும் அவரது இணை நடிகர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை,மேலும் இது குறித்து அவர் சைபர் கிரைமில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது,மேலும் எதிர்தரப்பில் பேசிய நபர் யார் என்று இணையவாசிகள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

  • Mohanlal Empuraan Controversy பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!
  • Leave a Reply