எப்போதுமே என் அருகில் இருப்பாய்.. – மறைந்த கணவரை நினைத்து வாடும் ஸ்ருதி சண்முக பிரியா செய்த செயல்..!

நாதஸ்வரம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா. இதனைத் தொடர்ந்து இவர் சிறிது கால இடைவெளிக்கு பின்னர் வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் படிக்க: இதுக்கு இல்லையா சார் ஒரு END?.. பெரிய இடத்து பெண்ணுடன் சிம்புவுக்கு விரைவில் திருமணம்..!

கடந்த ஆண்டு பாடிபில்டரும், உடற்பயிற்சியாளருமான அரவிந்த் சேகர் என்பவரை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

திருமணம் ஆகி இருவரும் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு பிரச்சினையால் மரணம் அடைந்தார்.

மேலும் படிக்க: ஏமாற்றி சொகுசு வாழக்கை வாழ்ந்த சைந்தவி?.. ஜீவனாம்சமாக கொட்டிக் கொடுத்த GV.. சர்ச்சையை கிளப்பும் பிரபலம்..!

சமீபத்தில் தன் கணவருடன் இணைந்து ஒரு விளம்பர வீடியோவை எமோஷனலாக ரீல்ஸ் செய்து வெளியிட்டிருந்த நிலையில், அவரது கணவர் மரணம் சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தது.

இந்நிலையில், கணவர் இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து ஸ்ருதி இப்போது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் இலட்சுமி தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் தனது இரண்டாவது திருமண நாளை தற்போது, கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ஒரு எமோஷனல் பதிவு போட்டுள்ளார். அதில், அவர் முதல் முறையாக நீ இல்லாமல் திருமண நாளை கொண்டாடி வருகிறேன். நீ என் அருகில் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த உலகம் நீ இல்லாத திருமண நாளை கொண்டாடுவதாக கூறினால், நீ என் பக்கத்தில் இருப்பது போல நான் நினைக்கிறேன். நீ எப்போதுமே என் அருகில் இருப்பாய் என்று முழுமையாக நம்புகிறேன் என்று பதிவு போட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதா இல்லை ஆறுதல் சொல்வதா என்பது எங்களுக்கு தெரியவில்லை என்பது போன்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

13 minutes ago

சத்தமே இல்லாமல் உதவி செய்யும் அஜித்… குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு!

ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…

44 minutes ago

திமுகவில் 2 விக்கெட் காலி.. இன்னும் பல தலைகள் உருளும்.. பார்த்து ரசிக்கலாம் : ஹெச் ராஜா பகீர்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…

1 hour ago

பிடிச்ச வேலையை என் வாயாலயே வேண்டாம்னு சொன்னேன்- மேடையில் கலங்கிய மணிமேகலை

விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…

1 hour ago

கார் விபத்தில் பிரபல பாடகி சின்னப்பொண்ணு இறந்துட்டாரா? பதறிய கனிமொழி!

தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…

1 hour ago

நடிகையை கட்டிப்பிடித்து கடித்த பிரபுதேவா.. படப்பிடிப்பில் நடந்த ஷாக் சம்பவம்!

சினிமா படப்பிடிப்பில் நிறைய சம்பவங்கள் எதிர்பாரா வகையில் நடப்பதுண்டு. சில சம்பவங்கள் பெரிய பிரச்சனையாக வெடித்துவிடும், சில சம்பவங்கள் சத்தமே…

2 hours ago

This website uses cookies.