உங்களால என் குடும்பம் உடைஞ்சு போயிடுச்சு… கணவரை இழந்த நடிகையின் உருக்கமான வீடியோ!

நாதஸ்வரம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா. இதனைத் தொடர்ந்து இவர் சிறிது கால இடைவெளிக்கு பின்னர் வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு பாடிபில்டரும், உடற்பயிற்சியாளருமான அரவிந்த் சேகர் என்பவரை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

திருமணம் ஆகி இருவரும் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தனர். ஸ்ருதி ஷண்முகபிரியா – அரவிந்த் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பேமஸ் ஆனவர்கள். இந்நிலையில், திடீரென ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு பிரச்சனையால் நேற்று மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி சீரியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கணவரை பிரிந்த ஸ்ருதி சண்முகப்பிரியா கணவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான ரொமான்டிக் போட்டோ ஒன்றை வெளியிட்டு, பிரிந்த உடல் தான். ஆனால், உங்கள் ஆன்மாவும் மனமும் என்னைச் சூழ்ந்து இப்போதும் என்றென்றும் பாதுகாக்கிறது! என் அன்பே அரவிந்த்சேகர்… உங்கள் மீதான என் அன்பு இப்போது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது, நாங்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நரக நினைவுகளை வைத்திருந்தோம், அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். உன்னை மிஸ் பண்ணுகிறேன் மேலும் உன்னை நேசிக்கிறேன் அரவிந்த்! என் அருகில் உங்கள் இருப்பை உணர்கிறேன் என ரொமான்டிக் பதிவு போட்டு எல்லோரது மனதையும் உருக்கி விட்டார்.

அதன் பின்னர் சற்று முன் தன் கணவரின் மர்ம செய்தி குறித்து உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”என் கணவர் அரவிந்தின் இறப்பு குறித்து பலரும் தொலைப்பேசி வாயிலாகவும், நேரிலும் இரங்கல் தெரிவித்து ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. அவர் எப்போதும் என்னுடன் தான் இருக்கிறார். இந்த துயரமான நேரத்திலும் கூட இப்படி ஒரு வீடியோவை வெளியிடுவதற்கான காரணத்தை நான் சீக்கிரமாக சொல்லிவிடுகிறேன்.

யூடியூப் சேனல்களில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தேவையற்ற தகவல்களை பரப்பி வருகிறார்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் இப்போது நான் பேசுவதையே எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். தெரியாத தகவல்களை பேசி என் குடும்ப உறுப்பினர்களை கஷ்டப்படுத்த வேண்டாம். எல்லாரும் வயதனாவர்கள். நாங்கள் மீண்டு வருகிறோம். அவர் இறந்தது மாரடைப்பால் தான். ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்த போது இறந்துவிட்டார் என்று பரப்ப வேண்டாம். ஒரு சிவில் இன்ஜினியர். உடல் ஃபிட்னஸில் அவருக்கு ஆர்வம் அதிகம் அவ்வளவு தான். இதைவிட்டுவிட்டு தவறான செய்திகள் பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என கெஞ்சி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Ramya Shree

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

58 minutes ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

2 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

4 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

4 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

5 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

6 hours ago

This website uses cookies.