ஆள் கடத்தல் வழக்கு?.. தற்கொலைக்கு முயன்ற ஸ்ருதிகாவின் அம்மா..!

Author: Vignesh
5 February 2024, 1:24 pm

தமிழ் சினிமாவில் பெரிதாக பிரபலமாகாத நடிகையாக இருந்து பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிகா.இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். 2002ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஸ்ரீ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப்படம் அட்டர் பிளாப் ஆகி பெரிதாக பேசப்படவில்லை. அடுத்தடுத்து, தமிழில் ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார். இதனிடையே, ஸ்ருதிகா அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

shrutika

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3 ல் கலந்துகொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார். இதனிடையே, Youtube சேனலை ஆரம்பித்து அதில், சில சமையல் கலாட்டா வீடியோவையும் பகிர்ந்து வருகிறார். அப்படி, சமீபத்தில் எடுத்த வீடியோ ஒன்றில், அம்மா கல்பனாவின் காதல் திருமணம் குறித்தும் பேசியுள்ளார். அதில், ஸ்ருதிகா அம்மா பேசுகையில், உன் காதல் எல்லாம் என்ன பெரிய காதல் நானும் உங்க அப்பாவும் செய்த காதல் திருமணம் எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியது தெரியுமா என்று கூறியிருக்கிறார்.

அதில், தாங்கள் கல்யாணம் பண்ணும் போது ஸ்ருதிகாவின் அப்பாவிற்கு 19 வயது தான், எனக்கு 23 வயது நான் பஞ்சாபி பெண். கிட்டத்தட்ட, நான்கு வயது கணவரை விட பெரிய பொண்ணு என்பதால், இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஒரு நாள் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களை போலீசார் தேடிக் கொண்டிருந்ததாகவும், ஒரு பொண்ணு தேங்காய் சீனிவாசனின் பையன் ஷங்கரை கடத்திட்டு போய்ட்டா என்று செய்திகள் வெளியே வந்ததாகவும், இதனை அறிந்து ஸ்ருதிகாவின் அம்மா கடலில் விழுந்து தற்கொலை செய்ய சென்று விட்டதாகவும், அப்போது ஸ்ருதிகாவின் அப்பா ஷங்கர் தான் காப்பாற்றி கூட்டிட்டு வந்தார் என்று ஸ்ருதிகாவின் அம்மா தெரிவித்துள்ளார்.

மேலும், போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நீ அந்த பையனை கடத்திட்டு போனியா என்று கேட்டார்கள். அதை சங்கரிடம் கேளுங்கள் என்று தெரிவித்தேன். ஷங்கரும் நாங்கள் லவ் பண்ணி தான் போனோம் என்று கூறியும் மறுபடியும் என்னிடம் நீ கடத்திட்டு போனியானு கேட்டாங்க இப்பொழுது, அதை எல்லாம் நினைத்தால் வேடிக்கையாக உள்ளது என்று ஸ்ருதிகாவின் அம்மா கல்பனா தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 487

    0

    0