என்கிட்ட வந்து, யோசிக்க கூட முடியல… கசப்பான அனுபவத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..!

Author: Vignesh
23 September 2023, 3:23 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

shruti haasan-updatenews360

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

shruti haasan-updatenews360

இந்நிலையில் தற்போது காதலருடன் நிர்வாணமாக படுக்கையில் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் காட்டு தீயாக பரவியது.

இதனிடையே, ஸ்ருதிஹாசன் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில், தனக்கு நடந்த கசப்பான அனுபவம் ஒன்றே பகிர்ந்துள்ளார்.

அதில், அவர் நான் மும்பை விமான நிலையத்திற்கு சென்றபோது, ஒரு நபர் என்னை பின்தொடர்ந்து வருவதை பார்த்தேன். அவர் யார் என்று கூட தெரியாது அவர் எனக்கு நெருக்கமாக வந்து அங்கிருந்து வேகமாக சென்று காரில் ஏறுவது வரை அந்த நபர் என்னை பின் தொடர்ந்து வந்தார். அப்போது, நான் மிகவும் பயந்துவிட்டேன். இப்போது, நினைத்தால் கூட அது ஒரு மாதிரியாக தான் இருக்கிறது. அந்த நேரத்தில், நான் நீங்கள் யாரென்று சத்தமாக கத்தி விட்டேன். உடனே அங்கிருந்து அந்த நபர் நழுவி சென்று விட்டார். நான் பாடிகாட் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறேன் என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 586

    0

    0