லோகேஷை லவ் பண்ணாத ஆளே இல்லை.. ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்..!

Author: Vignesh
26 March 2024, 11:23 am

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

இந்நிலையில், இனிமேல் ஆல்பம் பாடலை பார்த்ததுமே ரசிகர்கள் எப்படி இப்படி லோகேஷ் நடித்தார் என்று அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஏனென்றால், அந்த அளவிற்கு நெருக்கமான காட்சிகள் இருவருக்கும் இடையே இடம்பெற்று இருந்தது. இந்நிலையில், சுருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து அளித்த பேட்டியில், எக்ஸ் லவ், கோஸ்டிங் நடந்திருக்கா என்கிற கேள்விக்கு, அதெல்லாம் இல்லிங்க…. என லோகேஷ் சொல்ல உடனே, ஸ்ருதிஹாசன் இவரை லவ் பண்ணாத ஆளே இல்லை எல்லா பெண்களும் லோகேஷை லவ் பண்றாங்க.. பெண்களைப் போலவே ஆண்களும் இவரை லவ் பண்றாங்க என்றார்.

lokesh kanagaraj-updatenews360

நாலு நிமிஷங்கள் உருவாகியுள்ள இந்த பாடலின் ஷூட்டிங் மூன்று நாட்கள் டே அண்ட் நைட் நடந்தது. எனக்கு எதுவுமே தெரியாது என்னை இதில் நடிக்க ஏன் கேட்டீர்கள் என்று ஸ்ருதிஹாசனிடம் கேட்டேன். பாடலைக் கேட்கச் சொன்னார், புது ஜோடியாக இருந்தால் நல்லா இருக்கும் என்று சொன்னதும் சம்மதித்ததாக தெரிவித்துள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!