நீங்க வெர்ஜின் பொண்ணா? ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் ஷாக்கிங் பதில்!

Author: Shree
16 March 2023, 7:50 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரசிகர்ளின் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசனிடம், நீங்கள் வெர்ஜின் பொண்ணா என்ற கேள்விக்கு முதலில் ஒழுங்காக அந்த வார்த்தைக்கு ஸ்பெல்லிங் தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

அடுத்து, மது அருந்துவது பற்றிய கேள்விக்கு, நான் குடிப்பதில்லை, ஆல்கஹால் இல்லாத பீர் குடிப்பேன். குடிபழக்கமில்லா வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன் என கூறியிருக்கிறார். மேலும் அதில் சில எல்லை மீறிய கேள்விகள் முகம் சுளிக்க வைத்துள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!