இது ஒன்னு இருந்தா போதும்.. அதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்களுக்கு ஸ்ருதிஹாசன் பதிலடி..!

Author: Vignesh
2 January 2023, 12:00 pm

‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ மற்றும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது.

இணைய தலைமுறையினரின் கையடக்க கணினி முதல் அவர்கள் பணியாற்றும் மடிக்கணினி வரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிக்கும் நடிகையான ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார்.

Sruthihasan updatenews 360

மில்லியன் கணக்கிலான மக்களை தன் சமூக வலைதள பக்கங்களின் பின் தொடர்பாளர்களாக கொண்டிருக்கும் இவர், தன்னை பற்றிய செய்திகளையும், தான் உணர்ந்த உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட காணொளிகளும், எண்ணங்களும் சாட்சி.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.

Sruthi-Updatenews360 (4)

வால்டேர் வீரய்யா படத்தில் நடித்துள்ள டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும், அதேபோல், வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

இருவருமே தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருந்தாலும், 60 வயதை கடந்த சீனியர்கள் என்பதனால் தனது அப்பா வயதுடைய நடிகர்களுடன் ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடிக்கிறாரே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

Sruthihasan updatenews 360 03

இதுகுறித்து ஸ்ருதிஹாசனிடம் வயதான நடிகர்களுடன் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ருதி, “நடிப்பு துறையில் வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே என்றும், நடிக்கும் திறமை இருந்தால் உயிரோடு இருக்கும் வரை நடிக்கலாம் எனவும், இதை ஏற்கனவே பல வயதான நடிகர்கள் தங்களை விட இரண்டு மடங்கு வயது குறைவான இளம் நாயகிகளுடன் நடித்து நிரூபித்துள்ளதாகவும், அதனால் இதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல” என்று மிக போல்டாக தெரிவித்துள்ளார். ஸ்ருதியின் இந்த பதில் ட்ரோலர்களுக்கு செம்ம பதிலடியாக அமைந்துள்ளது.

Sruthi hasan updatenews360 0
  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu