என்கிட்ட வந்து ஒட்டி உரசி… பொதுவெளியில் நடந்த கசப்பான அனுபவம் – ஸ்ருதி ஹாசன் வேதனை!

Author: Shree
23 September 2023, 1:47 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.

தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து வருவதோடு எப்போதும் சமூகவலைத்தளங்களில் செம ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனக்கு நடந்த மோசமான சம்பவம் ஒன்றை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதாவது, நான் மும்பை ஏர்போர்ட்டில் இருந்து நடந்துவந்த போது முகம் தெரியாத நபர் ஒருவர் என்னை பின்தொடர்ந்துக்கொண்டே வந்தார். ஒருகட்டத்தில் மிகவும் நெருக்கமாக எனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நான் அங்கு இருந்து வேகமாக சென்று காரில் ஏறுவது வரை தொடர்ந்து வந்தார்.

shruthi hassan

கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் நீங்கள் யார்? என்று சத்தமாக கேட்டு திட்டினேன். உடனே அவர் அங்கிருந்து நழுவி சென்று விட்டார். பொதுவாக நான் பாடிகார்டு வைத்துக்கொள்ள விரும்பவில்லை. சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறேன். ஆனால் இது போன்ற மோசமான சம்பவங்கள் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது என ஸ்ருதி ஹாசன் கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu