பல பேருக்கு அல்வா கொடுத்த ஸ்ருதி ஹாசன்.. அப்படியே கமலின் ஜெராக்ஸ்..!

Author: Vignesh
5 January 2024, 12:45 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

shruti hassan

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

shruti haasan - updatenews360

ஸ்ருதி ஹசன் தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் – பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஒரு பேட்டியில், எனக்கு இருந்த மோசமான குடிப்பழக்கத்தை நான் இப்போது விட்டுவிட்டேன். இப்போது, நான் தெளிவாக இருக்கிறேன் என்று சுருதிஹாசன் கூறி உள்ளார்.

இந்நிலையில், அப்பாவுக்கு இணையாக ஸ்ருதிஹாசன் லிவிங் வாழ்க்கை வாழ்ந்து அவர்களை கழட்டிவிட்ட செய்தி அவ்வப்போது இணையதளத்தில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூருடன் காதலில் இருந்து அதன் பின் அவரை கழட்டிவிட்ட ஸ்ருதிஹாசன் வெளிநாட்டு நபரான மைக்கேல் கோர்சர் என்பவரை காதலித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரையும் பிரிந்தார்.

shruti haasan - updatenews360

பின்னர், ஓ மை ஃபிரெண்ட் என்ற படத்தில் நடித்த போது, நடிகர் சித்தார்த் உடன் நடித்த சமயத்தில் காதலில் இருந்து அவுட்டிங், டேட்டிங் என கலக்கினார். அதன்பின்னர், அவரையும் விட்டு பிரிந்தார். தற்போது, சாந்தனுடன் காதலில் இருந்து ஒன்றாக தனி வீட்டில் வாழ்ந்து வரும் ஸ்ருதிஹாசன் திருமணம் என்ற பேச்சு எடுத்தால் அதற்கு பதில் அளிக்காமல் இருந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நல்லா இருக்கு… லிவிங் டு கெதர்-னா இனிக்குது.. கல்யாணம்னா கசக்குதா? என்று கண்டமேனிக்கு கமெண்ட் களில் தெரிவித்து வருகின்றனர்.

shruti haasan - updatenews360

தற்போது, கமல் ஹாசன் அரசியல், நடிகர் என மதிக்கத்தக்க அளவிற்கு இருந்தாலும், ஆரம்ப காலகட்டங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கி வந்த இவரது பெயர், பல நடிகைளுடன் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், சில நடிகைகளுடன் காதல், லிவிங் டு கெதர் என ஒரு பிளேபாய் ரேஞ்சிற்கு இவரது பெயர் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?