ரகசிய திருமணம் செய்து கொண்ட ஸ்ருதிஹாசன்?.. கமல் மகள் வெளியிட்ட பதிவு..!

Author: Vignesh
28 December 2023, 11:37 am

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

இந்நிலையில், சமீபத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் பேட்டியில் ஸ்ருதிஹாசனின் ஹஸ்பெண்ட் என சாந்தனுவை குறிப்பிட்டார். அதனால், ஸ்ருதிஹாசன் தனது காதலன் சாந்தனுவை ரகசியமாக திருமணம் செய்து விட்டாரா என செய்தி பரவத் தொடங்கியது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், எனக்கு திருமணம் ஆகவில்லை. அனைத்தையும் ஓபனாக சொல்லும் நான் இதை ஏன் மறைக்க போகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.

shruti haasan - updatenews360
  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!