கத்தி கத்தி ரொமான்ஸ்.. காதலனுடன் கலக்கல் ஸ்டைலில் ஸ்ருதி ஹாசன்..!(வீடியோ)

Author: Vignesh
1 November 2023, 10:06 am

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

shruti hassan

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.

தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து வருவதோடு எப்போதும் சமூகவலைத்தளங்களில் செம ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சுயாதீன இசை ஆல்பத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். இதனை கமல் ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மூலம் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து இந்த புதிய இசை படைப்பில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

shruti haasan - updatenews360

இந்நிலையில், பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் மான்ஸ்டர் மெசின் என்ற பாடலை பாடி, முரட்டுத்தனமாக ஆட்டம் போட வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். தற்போது, தன் காதலர் சாந்தனுவுடன் நெருக்கமாக கத்தி ரொமான்ஸ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

  • Bala about Fans Knowledge வாழப்பழத்த ஊட்ட முடியாது.. ரசிகர்களை சீண்டி பார்த்த பாலா!
  • Views: - 426

    1

    1