அப்படியே கமலின் ஜெராக்ஸ் ஸ்ருதி ஹாசன்.. குடிப்பழக்கம், லிவிங் டுகெதர் வாழ்க்கை.. பிரபலம் ஓபன் டாக்..!

Author: Vignesh
27 December 2023, 12:49 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

shruti hassan

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

ஸ்ருதி ஹசன் தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் – பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

shruti hassan-updatenews360

ஒரு பேட்டியில், எனக்கு இருந்த மோசமான குடிப்பழக்கத்தை நான் இப்போது விட்டுவிட்டேன். இப்போது, நான் தெளிவாக இருக்கிறேன் என்று சுருதிஹாசன் கூறி உள்ளார். இது குறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தற்போது விமர்சித்துள்ளார். அதாவது, சமீபத்தில் பிரஸ்மீட்டில் ஒரு ரிப்போர்டர் சுருதிஹாசனிடம் தம்மடிக்கும் பழக்கம் இருக்கா என்று கேட்டுள்ளார். அதற்காக அதெல்லாம் என்னங்க சொல்லிட்டா, இருப்பாங்க இருக்கத்தான் செய்யும் என்னுடைய சுதந்திரம் அது. ஆனால், இப்போது அதை விட்டுவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

எதையும் மூடி மறைக்காமல் காதல் படுக்கையில் போட்டோ என்று போட்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு செய்யாறு பாலு இரு பெண் பிள்ளைகளை ஆண் பெண் என்று பிரிப்பதில்லை. பெண் பிள்ளையாகவும் பார்க்கவில்லை என்று கமல் தெரிவித்தார். அது சுதந்திரம் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், குடி பழக்கத்திலிருந்து மீண்டு விட்டேன் என்று கூறியது எனக்கு அதிர்ச்சியாக இல்லை என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

shruti haasan - updatenews360

மேலும், பஞ்சதந்திரம் படத்தின் போது சிம்ரனுடன் தொடர்புபடுத்தி பத்திரிகையில் எழுதினார்கள். அதற்கு கமலஹாசன் வேறு ஒரு ஊடகத்திற்கு ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்பது போன்று ஸ்டில் கொடுத்தும், என் வீட்டு பெட்ரூம் ஜன்னலை எட்டிப் பார்க்க நீ யாருடா என்று கேட்டு பேட்டி அளித்தும் இருந்தார். அப்படியே அவரின் ஜெராக்ஸ் தான் ஸ்ருதிஹாசன் எந்த விமர்சனத்திற்கும் கவலைப்படாமல் இருப்பவர் சுருதிஹாசன் என்று தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 375

    0

    0