நான் ஏன் செய்ய கூடாது?.. இதுக்காக வருத்தமோ வெட்கமோ எனக்கு இல்லை.. உண்மையை சொன்ன ஸ்ருதி ஹாசன்..! – ஷாக்கடைந்த ரசிகர்கள்..!
Author: Vignesh14 October 2022, 2:30 pm
நடிகை ஸ்ருதி ஹாசன் அப்பா கமல் ஹாசன், அம்மா சரிகா வழியில் நடிக்க வந்தார். ஸ்ருதி ஹாசன் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில், மூக்கு வேறு மாதிரி இருந்ததால், தன் முகத்தை அழகாக்க ஸ்ருதி ஹாசன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகாக்கிவிட்டார் என்று பல காலமாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் பேட்டி ஒன்றில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்வியில், ஆமாம்.. தன் மூக்கை சரி செய்ததாகவும், முன்னதாக தன் மூக்கு உடைந்துவிட்டது என்றும், அந்த மூக்குடன் தான் முதல் படத்தில் நடித்ததாகவும், அதன் பிறகே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூக்கை சரி செய்ததாக தெரிவித்தார். தன் முகம், தான் ஏன் செய்யக் கூடாது என்று ஸ்ருதி ஹாசன் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய ஸ்ருதி ஹாசன், தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது குறித்து யாருக்கும் விளக்கம் அளிக்கத் தோன்றவில்லை என்றும், செயற்கை முறையில் எதையும் செய்வதை தான் ஊக்குவிப்பது இல்லை என்றும், இன்று ஒரு கேள்வி கேட்பார்கள், நாளை வேறு கேள்வி கேட்பார்கள் என மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
முன்னதாக நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை ஒப்புக் கொள்வது இல்லை. இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தைரியமாக பேசியதை பாராட்டி, யார் என்ன சொன்னால் என்ன, உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.