ஸ்ருதி ஹாசனா இது? சின்ன வயதிலே இம்புட்டு திறமையா…! வைரல் வீடியோ!

Author: Shree
26 April 2023, 9:12 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

இவர் 6 வயதில் அப்பா கமலின் தேவர் மகன் படத்தில் தனது முதல் பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹே ராம் உள்ளிட்ட படங்களில் சிறு வயதாக இருந்த போதே பாடல்கள் பாடியிருக்கிறார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் முறையாக இசை கற்று படங்களில் திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசனின் முதல் மேடை பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறு வயதில் இவ்வளவு திறமையா என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வியந்து இந்த கியூட்டான வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி