காதலன் பற்றி கேட்டதும் Emotional ஆன ஸ்ருதி ஹாசன் – என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க!

Author: Shree
8 April 2023, 8:15 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

Shruti Haasan-updatenews360

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.

இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் காதலன் சாந்தனு எப்படிப்பட்டவர் என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசன், ” அவர் எனது சினிமா சார்ந்த வேலைகளுக்கு அவர் மிகவும் சப்போர்ட்டாக இருக்கிறார். அவர் நேச்சுரலாகவே பெண்களை மரியாதையுடன் நடத்தும் குணம் கொண்டவர்.

Shruti Haasan-updatenews360

அம்மா , தங்கைகளுடன் அப்படித்தான் அவர் வளர்ந்தார். மேலும் அவர் மிகவும் திறமை வாய்ந்த டூடுல் ஆர்ட்டிஸ்ட். அவர் மிகவும் அன்பானவர். தினம் தினம் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன் என மிகவும் எமோஷனலாகி அவரை குறித்து நிறைய நல்ல விஷயங்களை பகிர்ந்தார். ஸ்ருதி எவ்வளவு அவரை காதலித்தால் இவ்வளவு அன்பாக இருப்பார் என ரசிகர்கள் சாந்தனுவுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

https://www.facebook.com/watch/?v=1250218975926971&ref=sharing

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 913

    0

    0