உடம்பின் அந்த இடத்தில் இந்து கடவுளின் டாட்டூ… சர்ச்சைக்குள்ளாகும் ஸ்ருதி ஹாசன்!

Author: Shree
24 April 2023, 10:08 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.

இந்நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய வகையில் தனது உடம்பின் பின்புறத்தில் ‘ஷ்ருதி’ என அவரது பெயர் பச்சைகுத்தியதோடு மயில் தோகையில் முருகன் வேல் குறியீடு போன்று டாட்டூ குத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. என்ன தான் அவர் கடவுள் மீது நம்பிக்கையுள்ளவர் போல் தன்னை காட்டினாலும் அது இந்துக்கள் கடவுளை அவமதிப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 754

    6

    5