கமல் பணத்தை காதலனுடன் சேர்ந்து காலி பண்ணும் ஸ்ருதி ஹாசன் – லிவிங் டூ கெதர் அலப்பறைகள்!

Author: Shree
4 April 2023, 7:07 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

இந்நிலையில் தற்போது காதலருடன் தனக்கு இருக்கும் புரிதல் குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், யாருக்கு முதல் பிடிக்க ஆரம்பித்தது? என்ற கேள்விக்கு சாந்தனு என்றார். யார் முதலில் காதலை சொன்னது என்ற கேள்விக்கு – ஸ்ருதி ஹாசன் கை தூக்கினார்.

யார் அதிகம் பணம் செலவு செய்வார்கள் என்பதற்கு ஸ்ருதி ஹாசன் என இருவரும் சொல்கிறார்கள். இதனை பார்த்த நெட்டிசன்ஸ், உனக்கென்னமா உங்கப்பா பணத்துல நல்ல வாழுறீங்க, காதலன் கொடுத்துவச்சவரு நல்லா மஜா பண்றாப்புல என கூறி வருகின்றனர்.

https://www.youtube.com/shorts/hoN43PfTT5Q
  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி