தமிழ் சினிமாவின் தற்போதைய மூத்த நடிகரான கமல் ஹாசன் கோலிவுட் சினிமாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் தலைவனாக இருக்கிறார். நடிப்பு, நடனம் , பாடகர், தொகுப்பாளர் இப்படி சினிமாவில் பன்முக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
இவருக்கு ஸ்ருதி ஹாசன் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஸ்ருதி ஹாசன் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து பின்னர் 7ம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
ஸ்ருதி தற்போது காதலன் ஹசாரிகா என்பவருடன் மும்பையில் வீடெடுத்து திருமணம் ஆகாமலே ஒன்றாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், எப்போதாவது தந்தை கமல் ஹாசன் பேச்சை கேட்காமல் இருந்திருக்கிறீர்களா? என கேட்டதற்கு,
ஆம், நிறைய விஷயங்களில், நான் சின்ன வயசில் இருந்து வாலு பொண்ணு. அப்பா பேச்சுக்கு எதிர்மறையாக எதையேனும் செய்து வெறுப்பேத்துவேன். அப்படித்தான் ஒருமுறை அப்பா மழையில் நனையாதே, சுவிட்ச் பாக்சில் கை வைக்காதே என திட்டினார்.
நான் அதை நிறுத்தாமல், ஏன் ? எதற்கு? என திரும்ப திரும்ப கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் காலம் வரும்போது புரிஞ்சிக்குவ என சொல்லிவிட்டு போய்விட்டார் என்றார்.
அப்போ காதலன் விஷயத்தில் கூட அப்படித்தானோ? கமல் தண்ணி தெளிச்சு விட்டதால் தான் மும்பைக்கு சென்று வீடெடுத்து காதலனுடன் தனியாக இருக்கீங்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.