அவர் சொன்னாரு நான் செய்தேன்.. லீக் வீடியோவுக்கு பிறகு போல்டாக பேசிய சிறகடிக்க ஆசை ஸ்ருதி!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2025, 10:43 am

சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது

அப்படி சின்னத்திரையில் இன்றைய தேதிக்கு ஏராளமான பிரபலங்கள் உள்ளனர். தங்களது அழகு மற்றம் நடிப்பு மூலம் ஏராளமானோர் பிரபலமாகி வருகின்றனர்.

இதையும் படியுங்க: டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

அப்படி பிரபலமானவர் தான் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன். தனது நடிப்பால் பல ரசிகர்களை கட்டிப்போட்ட இவருக்கு பெரிய திரையில் வாய்ப்புகள் வரத் தொடங்கின.

ஆனால் அதற்கு முன் யாருமே எதிர்பாராத வகையில் அவரது அந்தரங்க வீடியோ வெளியானது. இணையத்தில் காட்டுத் தீ போல பரவியது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை இப்படி சீரழிக்க கூடாது என பலரும் பல விதமான கருத்துக்களை முன் வைத்தனர்.

இது குறித்து ஸ்ருதி நாராயணன், எல்லாமே இந்த விஷயத்தில் எல்லை மீறி போய்விட்டது. ஃபோன் திரைக்கு பின் இன்னும் உறுதிப்படுத்தாத ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்க துடிக்கற மனிதனை பற்றி யாரும் பேசுவதில்லை. ஒரு இரண்டு நொடி கூட யோசிக்கவில்லை என கடுமையான பதிவுகளை போட்டிருந்தார்.

உணர்வுகளை கொண்ட பெண் தான் நானும் என்பதை எத்தனை முறை சொல்வது, தயவு செய்து இதை நிறுத்துங்கள், என்று ஆண்களை வசைபாடியிருந்தார்.

இவர் இப்படி பேசியிருக்கும்போது அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய ஸ்ருதி, 15 படங்களை இயக்கிய அந்த இயக்குநர் தான இந்த வேலையை செய்தார் என ஓபனாகவே போட்டுடைத்தார்.

யார் அந்த இயக்குநர் என ஒரு பக்கம் நெட்டிசன்கள் தேட, மறுபக்கம் GUTS என்ற படத்ததில் நடித்த ஸ்ருதி நாராயணன், அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பரபரப்பாக பேசினார்,

அதில் பேசிய அவர், எனக்கு ஒண்ணும் தெரியாது, இந்த படத்தில் எப்படி நடிக்க வேண்டும் என இயக்குநர் ரங்கராஜ் கூறினாரோ அது போல நடித்துள்ளேன்.

Shruti spoke boldly after the leaked video

நல்ல நுட்பமாக சொல்லிக் கொடுத்துள்ளார். உங்கள் ஆதரவு இந்த படத்துக்கு வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என இயக்குநர் அத்தனையும் கற்றுக்கொடுத்தார்.

GUTS படத்தில் இரண்டாவது கதாநாயகியாக தான் நடித்துள்ளதாகவும், அந்த கதாபாத்திரம் நன்றாகவே வந்துள்ளதாகவும் ஸ்ருதி போல்டாக பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?
  • Leave a Reply