Daily ஒரு புது Dress! அப்பா சொத்தே அழிச்சிட்டேன் – ஸ்ருதிகாவின் ஜாலி பேட்டி!

Author: Rajesh
2 February 2024, 8:19 pm

தமிழ் சினிமாவில் பெரிதாக பிரபலமாகாத நடிகையாக இருந்து பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிகா. இவர் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். 2002ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் ஸ்ரீ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப்படம் அட்டர் பிளாப் ஆகி பெரிதாக பேசப்படவில்லை.

அடுத்தடுத்து தமிழில் ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார். இதனிடையே ஸ்ருதிகா அர்ஜூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இதையடுத்து கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமளவில் பிரபலமானார்.

shrutika-updatenews360

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கல்லூரி நாட்கள் குறித்து பேசியுள்ள ஸ்ருதிகா, நான் தினமும் கல்லூரிக்கு புது புது ஆடைகளை தான் வாங்கி உடுத்தி செல்வேன். என் கூட படிக்குறவங்களே…. நீ போட்ட ட்ரஸ் திரும்ப போடவே மாட்டியா? அடுத்த 2 வருஷத்துக்கும் புது ட்ரெஸ் தான் போடப்போறியா என கேட்பார்கள். எங்கப்பா சொத்து அதுலயே அழிஞ்சி போச்சு என ஸ்ருதிகா அந்த பேட்டியில் கலகலப்பாக பேசினார். இதோ அந்த வீடியோ:

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!