பல ஆயிரம் சொத்து இருந்தும் மகளை தவிக்கவிட்ட சூப்பர் ஸ்டார்? இந்த கொடுமையை கொஞ்சம் கேளுங்க!
Author: Shree19 July 2023, 8:46 am
பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், 60 ஆண்டுக்களாக திரையுலகில் கொடிக்கட்டி பறந்தார். இப்போதும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி ஹோட்டல் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருவது மட்டுமின்றி சினிமாவிலும் முதலீடு செய்து இருக்கிறார்.
இதன்மூலம் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமிதாப் பச்சன். மேலும் இவரின் சொத்துமதிப்பு மட்டும் ரூ. 3000 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. தற்போது 80 வயதாகும் அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் பச்சனும் தன் தந்தையைப் போலவே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.
இவர் உலக அழகி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து உலக இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தற்போது அமிதா பச்சன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அமிதாப் பச்சனின் மகள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
ஆம், அமிதாப் பச்சனின் மகள், ஸ்வேதா பச்சன் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது ஆரம்பல காலத்தில் இருந்தே சுகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மேலும் அவர் நிகில் நந்தா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கும் சகல வசதிகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இப்படி ஒரு நேரத்தில் தான் ஸ்வேதா பச்சன் கோடிக்கணக்கில் தன் அப்பாவின் சொத்திற்கும் , கணவரின் சொத்திற்கும் ஆசை படாமல் ரூ. 3000 சம்பளத்திற்கு ஒரு கிண்டர்கார்டன் பள்ளியில் டீச்சராக வேலையை செய்ததாக கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
தனது சொந்த முயற்சியில் நன்றாக வளரவேண்டும் என்பது தான் ஸ்வேதா பச்சனின் ஆசையாம். அவர் தற்போது சொந்தமாக ஒரு பேஷன் லேபிள் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஸ்வேதாவின் மகள் நவ்யா பார்த்துக்கொள்கிறாராம்.