ரோஜா சீரியல் சிபுவுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் புகைப்படம்..!
Author: Vignesh31 January 2024, 12:00 pm
பொதுவாக எந்த சீரியலாக இருந்தாலும், இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்று விடும். அந்த வகையில், சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதில், நடித்த ஹீரோவான சிபு சூரியன் அதற்குப் பிறகு விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா 2 தொடரில் நடித்தார்.
ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு அந்த சீரியலுக்கு கிடைக்காத நிலையில், சேனல் தரப்பு சீரியலை முடித்து விட்டனர். அடுத்து சிபு சூரியன் ஜீ தமிழில் ஒரு புது சீரியலில் நடிக்கிற தொடங்கியிருக்கிறார். அதுவும், விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் சிபு சூரியன் தற்போது, அவரது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அவர் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில், அனைவரும் அவரது மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.