திருமண புகைப்படத்தை வெளியிட்ட சித்தார்த்..WOW… கண்ணை கொள்ளை கொள்ளும் பேரழகு…!

Author: Selvan
27 November 2024, 6:58 pm

சித்தார்த் – அதிதி ராவ் அழகான தருணங்கள்

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அந்த புகைப்படங்களை அவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Siddharth Aditi Rao second marriage

அதிதி ராவின் திரைத்துறை பயணம்

அதிதி ராவ் ஹைதாரி தனது திரைப்பயணத்தை மலையாள திரைப்படம் மூலம் தொடங்கி, டெல்லி 6,ராக்ஸ்டார்,மர்டர் 3 போன்ற இந்திப் படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

தமிழில், ‘காற்று வெளியிடை,செக்க சிவந்த வானம்,சைக்கோ’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பெற்றார்.

காதலித்து திருமணம்

சித்தார்த் மற்றும் அதிதி, தெலுங்கில் வெளியான ‘மகா சமுத்திரம்’ படத்தின் மூலம் சேர்ந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என கூறப்பட்டது. அந்த கிசுகிசுக்கள் திருமணத்தில் முடிந்தது.

Siddharth Instagram wedding pictures

இருவரின் திருமணம், தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம், மற்றும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதையும் படியுங்க: பறக்குறோம் பறந்தே ஆகுறோம்…தெறிக்கவிடப்போகும் ரேஸ் கார்…களத்தில் கெத்தாக அஜித் ..!

சித்தார்த்-அதிதி தங்கள் திருமண ஆல்பத்தில் சில அழகான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளனர். இந்த அழகிய தருணங்களை சமூக வலைதளங்களில் காண,ரசிகர்கள் உற்சாகமாக தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

சித்தார்துக்கும்-அதிதிக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • I loved My fans Uncondtionally Says Ajith kumar UNCONDITIONAL LOVE… கார் பந்தயத்திற்கு இடையே பேசிய அஜித் : சிலாகித்த ரசிகர்கள்! (வீடியோ)
  • Views: - 170

    0

    0