நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் சித்தா. சித்தார்த்துடன் இந்த படத்தில் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஸ்ரா ஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி பேசும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தின் புரோமஷனுக்காக தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என நடிகர் சித்தார்த் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சித்தார்த் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள ரெட் ஜெயண்ட் என் படத்தைப் பார்த்து, இதைவிட சிறந்த படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை என்று என் படத்தை வாங்கினார்கள்.
கேரளாவின் நம்பர் ஒன் வினியோகஸ்தர் கோகுலம் கோபாலேன்சர் படத்தைப் பார்த்துவிட்டு, 55 வருடங்களில் இப்படி ஒரு படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று கூறி படத்தை வாங்கினார்கள். கர்நாடகாவில் உள்ள கேஜிஎஃப் படத்தின் தயாரிப்பாளர் படத்தைப் பார்த்துவிட்டு, நாங்கள் இதுபோன்று எந்த ஒரு படத்தையும் பார்க்கவில்லை என்றும் எனது படத்தை கர்நாடக விநியோகத்தில் வாங்கினார்கள்.
ஆனால், தெலுங்குல சித்தார்த்தின் படங்களை யார் வந்து பார்ப்பார்கள்?” என்று பலர் கேட்டனர். நல்ல படம் பண்ணினால் மக்கள் பார்க்க வருவார்கள் என்று சொன்னேன். செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய படம்.இதனால் தியேட்டர்கள் கிடைக்காமல் போனது. அந்த நேரத்துல நாங்க இருக்கோம்னு சொல்லி படத்தை வெளியிட்டது ஏசியன் பிலிம் சுனில் வாங்கினார்கள்.
இந்த நேரத்துல சுனிலுக்கும் ஜான்விக்கும் இங்கு வந்ததுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதை விட நல்ல படம் பண்ண முடியாது. நிஜமாவே சொல்றேன். உங்களுக்கு பிடித்திருந்தால் சித்தா படத்தை பாருங்க, நீங்கள் சினிமாவை நம்பினால், சினிமாவை ரசிப்பவராக இருந்தால், தயவு செய்து போய்ப் பாருங்கள், அதைப் பார்த்துவிட்டு, சித்தார்த்தின் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று உங்களுக்குத் தோன்றினால், இனிமேல் தெலுங்கில் பிரஸ் மீட் நடத்த மாட்டேன் என்றும், தெலுங்கில் சித்தா தோல்வியடைந்தால் இனி இங்கு வரமாட்டேன் என்று ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சித்தார்த் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.